நான் விஜயன் சுகுமார். இந்திய குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவன். என்
நீண்ட நாள் கனவு இன்று நினைவாகின்றது.
நீண்ட நாள் கனவு இன்று நினைவாகின்றது.
ஆம்! நானும் ஒரு வலைப்பூவை தொடங்கிவிட்டேன்.
இத்தளத்தின் மூலம் நான் புதிய உலகைக் கண்ட புதிய பறவையாக சிறகு விரித்துப் பறக்க
ஆசைப் படுகிறேன்...
எனக்குத் தோன்றியவற்றை, என் சிறு அறிவுக்கு எட்டியவற்றை நான் இங்கு எழுதப்போகின்றேன். என் எழுத்தில் பிழை இருந்தாலோ அல்லது உண்மை இருந்தாலோ அவற்றை உங்கள் கண்டனமாகவோ பாராட்டாகவோ பின்னூட்டமாக பதிய உங்களைக்
கேட்டுக்கொள்கின்றேன்...
இங்கு அரசியல் முதல் இயற்கை வரை அனைத்தையும் விவாதிக்கப் போகின்றேன்...
புதிய பாரதம் படைக்க விழைகிறேன். அதற்கு தங்கள் நல்லாதரவை வேண்டுகிறேன்...
இவ்வாறு சொல்வதால் என்னை அரசியல்வாதி என்று எண்ண வேண்டாம். நான் இலவச கலர் டிவி இல் மானாட மயிலாட பார்க்கும் ஒரு சாதாரண இளைஞன்.
உங்களில் ஒருவனான எனக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்....(மீண்டும் சொல்கின்றேன், நான் அரசியல்வாதி இல்லை)
நன்றி...